ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வேட்பாளர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், கேஎஸ்.தென்னரசு, மேனகா, ஆனந்த் ஆகியோர் தங்களது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை செய்தனர்.
காலை 9 மணி வரை 10.10% வாக்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 238 வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி துவக்கப் பள்ளியில் வாக்களிக்க காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வாக்களித்தார்.
இதற்கு பதில் கூறிய ஈவிகேஎஸ் இளங்கோவன், வெற்றிபெற முடியாது என்பதால், எதிர்கட்சியினர் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர் என்றார். மேலும், இந்த இடைத்தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். இந்த தேர்தல் முடிவுகள் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும். இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெறுவோம்,” என்று கூறினார்.
ஈரோடு பெரியண்ணா வீதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்கு செலுத்துவதை முகவர் பார்த்ததாக புகார் எழுந்துள்ளது. சக முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து வாக்குப்பதிவு தெரியாத அளவிற்கு மறைக்கப்பட்டது.
பல இடங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். 75வயது மூதாட்டி ஒருவர் தள்ளுவண்டியில் வந்து தனது வாக்கினை பதிவு செய்ததார். தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.