சென்னை: தமிழக அரசு, கல்லூரிக் கல்வி இயக்ககம் இணைந்து மகளிருக்கு இலவச ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இதற்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக அரசு, கல்லூரிக் கல்வி இயக்ககம் இணைந்து மகளிருக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சி வகுப்புகளை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றன. அmதன்படி நடப்பாண்டுக்கான பயிற்சி வகுப்புகள் ராணி மேரி மற்றும் ஸ்ரீ மீனாட்சி கல்லூரிகளில் நடைபெற உள்ளது. இத்ற்கான விண்ணப்பம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி www.queenmaryscollege.edu.in, www.smgacw.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நவம்பவர் 20-க்குள் அனுப்பும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
2022-2023 ஆம் ஆண்டிற்கான பயிற்சி வகுப்புகள் (Free UPSC Free Coaching for women:) அறிவிக்கப்பட்டுள்ளன. ஆர்வமும், தகுதியும் உள்ள மாணவிகள் இதில் கலந்து கொண்டு பலனடையலாம். பயிற்சி வகுப்புகள் ராணிமேரி கல்லூரி அல்லது மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் நடைபெறும், விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்டவர்கள் இதில் எதேனும் ஒன்றில் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். தாங்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் கல்லூரியிலேயே வகுப்புகள் நடைபெறும்.
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி: 20.11.2022 ஆனால் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 24.11.2022 நுழைவுத் தேர்வு தேதி: 01.12.2022 (முற்பகல் 10.30 முதல் 12.30 மணி வரை) அன்று தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். நுழைவுத் தேர்வு, நேர்காணல் அனைத்தும் தாங்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் கல்லூரியிலேயே நடைபெறும்.
இந்த இலவச கோச்சிங்குக்கு விண்ணப்பிப்போர் வயது வரம்பு: 14.11.2022 அன்று 21 வயதுக்கு மேலும், 32 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும். பட்டியல் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரங்களுக்கு 5 ஆண்டுகள் வயது வர்மப்பில் சலுகை உண்டு. பிறப்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 3 ஆண்டுகள் வரை சலுகை பெற தகுதியுடையவராவர்.
பயிற்சி காலம்: குறைந்தது 6 மாதம். பயிற்சிகளை, விண்ணப்பதாரர்கள் தாங்கள் விரும்பும் ஏதாவது ஒரு கல்லூரியில் பெறலாம்.
விண்ணப்ப படிவம் www.queenmaryscollege.edu.in, www.smgacw.org இயைதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் பதிவிறக்கம் செய்யப்படும் விண்ணப்ப படிவத்துடன், விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், தேசிய வங்கிகளில் செலுத்தப்பட்ட ரூ. 200 வரைவோலை ( demand Draft) உடன் கல்லூரி நிர்வாக முதல்வருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்ப தபால் அட்டையில், CIVIL SERVICES EXAMINATIONS COACHING APPLICATION FOR ENTERANCE EXAMINATION” என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். வரைவோலையின் பின்புறம் விண்ணப்பதாரின் பெயர், முகவரி எழுதியிருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.