சென்னை: வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கியது முதல் இதுவரை 3 தடவை மாடுகள் மீது மோதி சேதமைடைந்த நிலையில், நேற்று இரவு, 4வது முறையாக, அரக்கோணம் அருகே சென்னை மைசூரு வந்தே பாரத் ரயில் மீது மாடு மீது மோதி சேதமடைந்தது. வந்தே பாரத் ரயிலுக்கும் மாடுகளுக்கும் ராசியில்லை என என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 5 வந்தே பாரத் அதிவேக ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், 4 முறை மாடுகள்மீது மோதி ரயில் சேதடைந்துள்ளது.  நாட்டின் 5வது வந்தே பாரத் ரயில் சென்னை டூ மைசூர் கடந்த 12ந்தேதி பிரதமர் மோடியால் பெங்களூருவில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரயில் சேவை தென்னிந்தியாவில் முதல் சேவை. இந்த ரயில் வழக்கம்போல நேற்று இரவு மைசூரில் இருந்து சென்னை வந்துகொண்டிருந்தது.

அப்போது, ரயில் அரக்கோணம் அருகே கன்றுக்குட்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வந்தேத பாரத் ரயில் சிறிது நேரம் பழுதடைந்து மீண்டும் இயக்கப்பட்டது. இந்த விபத்தானது. வந்தேபாரத் ரயில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்த போது அரக்கோணம் அருகே  கன்றுக்குட்டி மீது மோதியதாகவும், இதில்,  கன்றுக்குட்டி உடல் நசுங்கி ரத்த வெள்ளதத்தில் உயிரிழந்தது. இதனால், வந்தே பாரத் ரயில் பாதி வழியிலேயே சிறிது நேரம் நின்றது. பின்னர் மீண்டும் சென்னை இயக்கப்பட்டது.

ஏற்கனவே குஜராத் காந்தி நகர்- மும்பை இடையே செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 3வது முறை கால்நடைகள் மீது மோதி விபத்தில் சிக்கி முன்பக்கம் பகுதி பழுதடைந்தது. இந்த நிலையில், தற்போது 4வது முறையாக மாடுமீது மோதி சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.