சென்னை: தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் தான் ஆட்சிதான் – பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேருவது அதிமுக பாலிசி அதிமுக எக்ஸ்பிரஸ் டெல்லி நோக்கி கிளம்பி விட்டது,  ஓபிஎஸ்,டிடிவி இணைப்பு காலம் பதில் சொல்லும் என அதிமுக முன்னாள் அமைச்சர்  செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியான தாராபட்டி பகுதியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதியதாக ரூ.52.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தரைப் பாலம், பயணிகள் நிழற்குடை உள்ளிட்ட பணிகளை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜு, கடந்த 10ஆண்டுகளில் கூட்டுறவுத்துறையில் மாதம் 30 நாட்களில் 20 நாட்கள் நேரடியாக ரேசன் கடைகளுக்கே சென்று ஆய்வு செய்ததாகவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனக்கு கொடுத்த பதவியை தாம் திறம்பட செய்ததாகவும் தெரிவித்தார். இதன் காரணமாக பொதுமக்களுக்கு நல்ல ரேசன் பொருட்கள் சென்று சேர்ந்ததாகவும் கூறினார்.

ஒருசிலர் பிரிந்து செல்வார்கள், தேர்தலில் ஒன்றுசேர்வார்கள் அது அதிமுகவின் பாலிசிகளில் ஒன்றுதானே என கூறிய செல்லூர் ராஜூ, பிரிந்து சென்றவர்களை சேர்ப்பது குறித்து நிர்வாகிகளுடன் கலந்து பேசி நல்ல முடிவை எடப்பாடி பழனிச்சாமி எடுப்பார் என கூறினார். கூட்டணிக்கு அதிமுக தான் என்றுமே தலைமை ஏற்கும் என்று தெரிவித்த செல்லூர் ராஜூ, தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் தான் ஆட்சி அமைக்க முடியும் என்று குறிப்பிட்டார். தேர்தல் நேரத்தில் அதிமுக ஒன்றாக இணையும் என கூறியுள்ள செல்லூர் ராஜூ, எம்.ஜி.ஆர். காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் கட்சியில் பிளவு இருந்தது என்று தெரிவித்தார். தற்போது எடப்பாடி காலத்திலும் கட்சியில் சிதறல் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரேசன் அரிசி கடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கடத்தலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கைது நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டார், ரேசன் அரிசை கடத்தலை தடுக்க உரிய சட்டம் இயற்றி பாதுகாத்து வந்ததால் கூட்டுறவுத்துறை 27 தேசிய விருதுகளை வாங்கியதாகவும் தெரிவித்தவர். தற்போது கூட்டுறவுத் துறையை ஆளுங்கட்சி அமைச்சரே (நிதியமைச்சர்)விமர்சனம் செய்யும் அளவுக்கு கேள்விக்குறியாகிவிட்டது என சாடினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடன் பல்வேறு கேள்விகளுக்கு பதில்அளித்தவர்,  அதிமுகவை நம்பிய கூட்டணி கட்சிகள் நிச்சயம் பலனை அடையும். ஒருசிலர் பிரிந்து செல்வார்கள், தேர்தலில் ஒன்றுசேர்வார்கள் அது அதிமுகவின் பாலிசிகளில் ஒன்றுதானே என கூறினார்.

தமிழகத்திலிருந்து அதிமுக எக்ஸ்பிரஸ் கூட்டணி டெல்லி நோக்கி புறப்பட்டுவிட்டதாகவும், இதில் ஏறுபவர்கள் நம்பி ஏறலாம். நிச்சயம் பலன் அடைவார்கள் சிதறி சென்றவர்கள் நிலைமை தான் மோசமாகிவிடும் என தெரிவித்ததுடன்,  ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக தான் உள்ளதாக தெரிவித்தவர்,  ஓபிஎஸ், டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணைவார்களா என்ற கேள்விக்கு, அதற்க காலம்தான் பதில் சொல்லும் என கூறினார்.  பிரிந்து சென்றவர்களை சேர்ப்பது குறித்து நிர்வாகிகளுடன் கலந்து பேசி நல்ல முடிவை எடப்பாடி பழனிச்சாமி எடுப்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.