என்.ஐ.ஏ. எனும் தேசிய புலனாய்வு முகமை அலுவலகம் சென்னை புரைவாக்கத்தில் உள்ள மில்லர்ஸ் சாலையில் கடந்த ஓராண்டாக செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நடைபெறும் பயங்கரவாத குற்றங்களை விசாரிக்க இந்த அலுவலகத்தை மத்திய அரசு திறந்துள்ளது.
வழக்கில் கைது செய்யப்படும் குற்றவாளிகளை விசாரிக்க என்.ஐ.ஏ. அலுவலகத்தில் காவல் நிலையம் அமைக்கப்படாமல் இருந்தது.
மாநில அரசின் அனுமதிக்காக காத்திருந்த மத்திய அரசு அதிகாரிகள் பி.எப்.ஐ. உள்ளிட்ட முக்கிய வழக்கில் டெல்லியில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதனால் நடைமுறை சிக்கல் எழுந்த நிலையில் தற்போது காவல் நிலையம் அமைக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனை அடுத்து தமிழ்நாடு தொடர்புடைய பயங்கரவாத குற்றங்களை இனி சென்னையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.