தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா “விழாவில் மாலை அணிந்து வரும் பக்தர்கள் கோயிலில் தங்க அனுமதி இல்லை” மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளர். இது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காலங்காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் தங்கி சஷ்டி விரதம் இருந்து வரும் நிலையில், தங்கக்கூடாது என திமுக அரசு அறிவித்துள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 26ந்தேதி தொடங்கி 6நாட்கள் நடைபெறுகிறது. கடைசி நாளான 30ந்தேதி சூரசம்ஹாரமும், 31ந்தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. கந்த சஷ்டி திருவிழாவுக்கு சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது, பாதுகாப்பு வசதி உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ், சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, அறங்காவலர் குழுஉறுப்பினர்கள் கணேசன், செந்தில்முருகன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 லட்சம் லிட்டர் வீதம் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
30-ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரத்தை காண திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து பக்தர்கள் வருகை தருவதால் பல்வேறு வழித்தடங்களில் 350 அரசு பேருந்துகள் கூடுதலாக இயங்கப்படும்.
சூரசம்ஹாரம் அன்று தென்னக ரயில்வே மூலம் சென்னை மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
கந்த சஷ்டித் திருவிழா காலங்களில் நகர் முழுவதும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் ஒரே இடத்தில் கூடுவதால் செல்போன், தொலைபேசி சீராக இயங்கத்தக்க வகையில் தற்காலிக செல்போன் கோபுரம் அமைக்க பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தினரை கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவில் மாலை அணிவித்து வரும் பக்தர்கள் கோவிலில் தங்க அனுமதி இல்லை என்றும் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
திமுக அரசின் இந்த அறிவிப்பு பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கந்த சஷ்டிக்கு விரதம் இருந்து மாலை அணிந்து வரும் பக்தர்கள், சஷ்டி நாட்களாக 6 நாளும் கோவிலில் தங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது காலங்காலமாக நடைபெற்று வரும் நிகழ்வு. சஷ்டியையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் தங்கி சஷ்டி மேற்கொள்ள இருக்கும் நிலையில், கோயிலில் தங்கக்கூடாது என திமுக அரசு அறிவித்துள்ளது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 25ந்தேதி தொடக்கம்…