மதுரை: நீர்நிலைகள் ஆக்கிரமிப்பாளர்கள் விஷயத்தில் தமிழகஅரசின் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பாளர் களுக்கு அரசு மாற்று இடம் வழங்குவது ஆக்கிரமிப்பாளர்களை ஊக்கப்படுத்தும் செயல், அதை தவிர்க்க வேண்டும் என கூறி உள்ளது.
குமரி மாவட்டம் பறக்கை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தமிழகஅரசு ஏற்படுத்தும் தாமதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது என்று கடிந்து கொண்டனர், மேலும், ஆக்கிரமிப்பு அகற்றும்போது ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சைனைய காரணம் காட்டி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முன்வருவது இல்லை என்று கூறிய நீதிபதிகள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு அரசு மாற்று இடம் வழங்குவது ஆக்கிரமிப்பாளர்களை ஊக்கப்படுத்தும் செயல் என்றும் விமர்சித்தனர்.
மேலும், குமரி மாவட்டம் பறக்கை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.