விக்ரம் குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் வெப் தொடருக்காக நாகசைதன்யாவுடன் ப்ரியா பவானிசங்கர் நடிக்க இருக்கிறார்.
கடந்த ஆண்டு தொடங்கிய இந்த வெப் சீரிஸ் குறித்த பேச்சு, விக்ரம் குமார் இயக்கிய ‘தேங்க்-யூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து இதன் முறையான அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளிவர உள்ள இந்த வெப் தொடர் அமேசான் பிரைமில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.
நாக சைதன்யா, ப்ரியா பவானிசங்கர், பார்வதி ஆகியோர் தூதா என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த தொடரில் நடிக்க இருக்கிறார்கள்.