டெல்லி: அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரின் பிளஸ்2 படிக்க்கும் மகள்  லாவண்யா தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த நிலையில், திடீரென பூச்சிக்கொல்லி மருந்து உண்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரம் சர்ச்சையானது. மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதால்தான் தற்கொலை செய்துகொண்டதாக அவர் வெளியிட்ட வீடியோ உள்பட பல வீடியோக்கள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, மாணவி லாவண்யாவின் தற்கொலை வழக்கை கடந்த ஜனவரி 31-ம் தேதி சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த நிலையில், சிபிஐ விசாரணையை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை மாணவி லாவண்யாவின் தந்தை முருகானந்தம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில்  இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லாவண்யா தற்கொலை – சிபிஐ விசாரணை: மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்…