சென்னை: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முழுமையாகத் தயார் நிலையில் இருப்பதாகப் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள 14 மண்டலங்களில், தென்சென்னை பகுதிகளைச் சேர்ந்த 7 மண்டலங்களில் தனியார் நிறுவனkன உர்ப சேர் ஸ்மித் தூய்மைப் பணிகளை மேற்கொ;ண்டு வருகிறத. இந்த நிறுவனத்தின் பொறியியல், வாகன பராமரிப்பு நிலையத்தைத் திறந்துவைக்கும் நிகழ்ச்சி, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு தலைமையில் நடைபெற்றது. திட்டங்களைத் தொடங்கி வைத்து, தூய்மைப்பணி தொழிலாளர்களுக்கான மழைக்கால கவச உடையையும் (ரெயின் கோட்) அமைச்சர் கே.என். நேரு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ககன்தீப் சிங் பேடி உள்பட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்கைளை சந்தித்த மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, “சென்னையில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது குறித்து தினசரி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. தற்போதைய நிலையில், மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி 969 கிலோ மீட்டர் நீளத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் 90 விழுக்காடு பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் வரும் 10ஆம் தேதிக்குள் முழுமையாக முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதுபோல, சென்னையில் உள்ள ஏரிகளுக்கு நீர் செல்லும் பாதைகள் சீரமைக்கப்பட்டு வருகிற. தண்ணீர் செல்வதை தடுக்கும், தடைகளை அகற்றும் பணி வேகமாக நடைபெற்றுவருகிறது என்றார்.
தொடர்ந்து பேசியவர், நாளை நடைபெறவுள்ள மெகா தடுப்பூசி முகாமை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், சென்னையில் 30 விழுக்காட்டினர் முதல் தவணை கரோனா தடுப்பூசியும், 65 விழுக்காட்டினர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளவில்லை. எனவே அவர்கள் இந்த முகாமினைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
சென்னையில் தடையை மீறி போஸ்டர் ஒட்டும் பணி தொடர்கிறது. இதுவரை நாங்கள் அவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க விரும்பவில்லை, வேண்டுகோள் மூலமே இதனைத் தடுக்க விரும்புகிறோம். அதனால் யாரும் போஸ்டர் ஒட்ட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.