சென்னை:
தமிழகம் முழுவதும் “ஸ்டார்மிங் ஆபரேஷன்” மூலம் 3,325 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் கடந்த 23-ம் தேதி முதல் “ஸ்டார்மிங் ஆபரேஷன்” அதிரடியாக மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 52 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் 21,592 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, 3325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளின் பிடியாணையின்படி கைதானவர்கள் 294 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel