கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 487 பேர் போட்டியின்றி தேர்வு

Must read

சென்னை: 
ள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 487 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் விழுப்புரம்-கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் 6 மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கு 167 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில்,  கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதையடுத்து திமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

More articles

Latest article