ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் திரைப்படம் எனிமி.

இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி ரவி, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார். படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குனராக டி.ராமலிங்கம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

ஆக்ஷன் படமான இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படத்தின் டீஸரை நாளை மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக விஷால் அறிவித்துள்ளார்.

விஷால் தொடர்ச்சியாக நடித்துவந்த ஆக்ஷன் படங்கள் சரிவரப் போகவில்லை. தொடர் தோல்விகள். அதற்கு எனிமி என்ட் கார்ட் போடும் என்பது விஷால் மற்றும் அவரது ரசிகர்களின் நம்பிக்கை.