
லைகா நிறுவனம் தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், இந்தியில் அக்ஷய் குமாரின் ராம் சேது உள்பட பல படங்களை தயாரித்து வருகிறது.
இந்நிலையில், தனது புதிய தயாரிப்புக்காக இயக்குனர்களிடம் கதை கேட்க முடிவு செய்து அறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
நல்ல கதைகள் வைத்திருக்கும் இயக்குனர்கள் அவர்களின் முழ விவரத்துடன் கதைச்சுருக்கத்தை எழுதி, story@lycaproductions.in என்ற மெயிலுக்கு அனுப்ப கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கதைப் பிடித்திருந்தால், அந்த இயக்குனருக்கு படம் இயக்க வாய்ப்பு கிடைக்கும்.
இனிமேல் கதைக்கு முக்கியத்துவம் தர இருக்கிறார்களாம். தகுதியுள்ள இயக்குனர்கள் தங்கள் திறமையை சோதித்துப் பார்க்கலாம்.
[youtube-feed feed=1]Attention Filmmakers❗️We are Listening❗️📣 pic.twitter.com/n2Cu0DBFt9
— Lyca Productions (@LycaProductions) June 14, 2021