சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது மறைவுக்கு பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், எஸ்பிபி மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் ஒரு எளிமையான மற்றும் உயர்ந்த மனிதர். எனது முதல் ஸ்பான்ர்சரும் அவரே. 1983ம் ஆண்டு நடைபெற்ற தேசிய சாம்பியன்சிப் போட்டிக்கு, தான் பங்குபெற்ற சென்னை கோல்ட் அணிக்கு ஸ்பான்ர்சர் செய்த நல்ல மனிதர். நான் சந்தித்த மிகச்சிறந்த மனிதர்களில் அவரும் ஒருவர். அவரது இசை எங்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சியை அளித்தது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்..
இவ்வாறு தெரிவித்து உள்ளார்.