சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் வாரிசு நடிகர்கள் அவரை அவமானப்படுத்தியதுதான் காரணம் எனவும் வாரிசு நடிகர்களுக்கு ஆதரவாக ஆளும் கட்சி முக்கிய பிரமுகரும் மும்பை போலீஸாரும் துணையாக இருக்கிறார்கள் என்றும் கங்கனா புகார் கூறினார். மேலும் பாலிவுட் பார்ட்டிகளில் போது மருந்து தரப்படுகிறது என்றும் கூறினார்.


கங்கனாவுக்கு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கண்டனம் தெரி வித்தார். அவர் கூறும்போது, ’மகாராஷ்டி ராவையும், மும்பை போலீசை யும் கங்கனா அவமானப்படுத்தி உள்ளார். பயம் இருந்தால் அவர் மும்பைக்கு திரும்ப வரவேண்டாம்’ என தெரிவித்தார்.
அதற்கு சவால் விடுவதுபோல் பதில் அளித்த கங்கனா,’ மும்பைக்கு வரவேண் டாம் என்று பலரும் எச்சரிக்கிறார்கள், பயமுறுத்துகிறார்கள். வருகிற செப்டம்பர் 9-ந்தேதி மும்பை வருகிறேன் முடிந்தால் என்னை தடுங்கள்’ என தெரிவித்தார்.
இந்நிலையில் கங்கனா ரனாவத்துக்கு ஆபத்து இருப்பதால் அவருக்கு பாது காப்பு வழங்க வேண்டும் என்று அரியானா உள்துறை அமைச்சர் தெரிவித் திருந்தார். இதையடுத்து கங்கனாவுக்கு ஒய் பிளஸ் செக்யுரிட்டியை மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ளது.