விஷ்ணு விஷாலுக்கும் ரஜினிக்கும் திருமணமாகி ஆர்யன் என்ற மகன் இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக ரஜினிக்கும் விஷ்ணுவுக்கும் 2018-ம் ஆண்டு விவாகரத்து ஆனது.

இதனைத் தொடர்ந்து பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் தனது காதலை 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி உறுதி செய்தார்.

இன்று (செப்டம்பர் 7) ஜுவாலா கட்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு, திருமணம் செய்து கொள்ள உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஜுவாலா கட்டாவுக்கு மோதிரம் அணிவித்த புகைப்படத்தை விஷ்ணு விஷால் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் .