பாகுபலி பிரபாஸ் நடிக்கும் புதிய படம் ’ஆதி புருஷ்’. ‘தன்ஹாஜி’ பட இயக்கு னர் ஓம் ராவத் இப்படத்தை இயக்கு கிறார். பிரபாஸ் நடிக்கும் 3டி முப்பரி மாண தொழில் நுட்பத்தில் பெரும் பொருட் செலவில் படம் உருவா கிறது. பூஷண் குமார் தயாரிக்கிறார்.

இவர் ஏற்கனவே பிரபாஸ் நடித்த ‘சாஹோ’ தற்போது பிர்பாஸ் நடித்து வரும் ‘ராதே ஷ்யாம்’ தயாரித்துள்ளவர். ஆதி புருஷ் படம் பூஷண் குமார் -பிரபாஸ் இணை யும் மூன்றாவது திரைப்படம் ஆகும்


5 ஆயிரம் வருடத்துக்கு முந்தைய ராமா யணம் புராண கதையாக உருவாகும் இதில் ஆதிபுருஷ் என்ற ராமர் வேடத் தில் பிரபாஸ் நடிக்கிறார். இப்படத்தில் வில்லன் வேடத்தில் அதாவது ராவணன் வேடத்தில் நடிக்க இருப்பது பற்றி இன்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி அந்த நடிகர் பெயர் அறிவிக்கப்பட்டது. பாலிவுட்டில் ஹீரோவாக நடித்து வரும் சயீஃப் அலிகான் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
இப்படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2021-ம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆக வுள்ளது.


ஆதிபுருஷ் படம் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக படமாக்கப்பட்டு பின்னர் மற்ற தமிழ், மலையளம், கன்னடத்தில் டப்பிங் செய்யப்படவிருக்கிறது.