Skip to content
  • Thu. Jul 9th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

அரசு அறிவித்துள்ள நாளில் ஆம்னி பஸ்கள் இயங்க வாய்ப்பில்லை! உரிமையாளர்கள் தகவல்

Sep 3, 2020

சென்னை: தமிழகஅரசு அனுமதி வழங்கியபடி, வரும் 7-ந்தேதி முதல், தமிழகத்தில்  ஆம்னி பஸ்களை இயக்க வாய்ப்பு இல்லை என பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம் செப்டம்பர் இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் பொதுப்போக்குவரத்து, ரயில்சேவைக்கு தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது.

இந்த நிலையில், ஆம்னி பஸ்களை இயக்க வாய்ப்பு இல்லை என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

 இதுகுறித்து சங்க பொதுச்செயலாளர் அ.அன்பழகன் கூறியதாவது, கடந்த 5 மாதமாக பேருந்துகள் இயக்கப்படாத நிலையில்,  எங்களுக்கு பஸ்களை இயக்க வேண்டும் என்ற ஆசைகள் இருந்தும், எங்களால் இயக்கமுடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதனால் வருகிற 7-ந்தேதி முதல் ஆம்னி பஸ்களை இயக்க வாய்ப்பு இல்லை.
ஒரு பஸ்சை அதன் உரிமையாளர் மீண்டும் எடுத்து இயக்குவதற்கு குறைந்தது ரூ.2 லட்சமும், கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 2 காலாண்டு சாலை வரியாக ரூ.2½ லட்சமும் என மொத்தம் ரூ.4½ லட்சம் தேவைப்படுகிறது. இப்படி இருக்கையில் எப்படி பேருந்தை இயக்க முடியும்.
இந்த விஷயத்தில் முதல்வர்  2 காலாண்டு சாலை வரியை தள்ளுபடி செய்வதோடு, மேலும் சில கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்திடவேண்டும்  என்று வேண்டுகோள் விடுப்பதாக கூறியுள்ளார்.

Post navigation

பாரதியார் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 21ந்தேதி யுஜி, பிஜி இறுதித் தேர்வுகள்…
மாநகர பஸ்களில் சமூக இடைவெளி கேள்விக்குறியானது…

Related Post

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீவிர ஆலோசனை

உலகம்

உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar
உலகம்

தொடர் கொலை முயற்சிகள்… உயிர் தப்பிய தருணங்கள் : பல தாக்குதல்களை மீறி வந்த டிரம்ப்…

April 26, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer