டைரக்டர் கே.பாக்யராஜ் இயக்கிய டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் அறிமுகமானவர் பூர்ணிமா. ரஜினியுடன் தங்கமகன், மோகனுடன் விதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள் ளார். இயக்குனர் கே. பாக்யராஜை காதலித்து திருமணம் செய்துகொண் டார். இவர்களது மகன் நடிகர் சாந்தனு.
நடிகை பூர்ணிமாவின் தாயார் சுப்பு லட்சுமி. 85 வயதாகும் இவர் சென்னை லேக் ஏரியாவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். அங்கு அவர் மரணம் அடைந்தார்.

 

 

சுப்புலட்சுமியின் மகள் பூர்ணிமா மற்றும் ஸ்ரீராம் என்ற ஒரு மகன் இருக்கிறார். காலமான சுப்புலட்சுமி இன்று இறுதி சடங்கு நடக்கிறது.

 

முன்னதாக நேற்று மாலை பட தயாரிப்பாளர் கே.ஆர்.கண்ணன் காலமானார் . 73 வயதான இவர் திடீர் மாரடைப்பில் மரணம் அடைந்தார். இவர் குஷ்பு நடித்த கலர் கனவுகள் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர். கே,ஆர்,கண்ணன் இறுதி சடங்கும் இன்று நடக்கிறது.