துருவ் விக்ரம் நடித்த பாலாவின் ’வர்மா’ ஒடிடியில் ரிலீஸ் ஆகிறது? மீண்டும் பரபரப்பு..

Must read

சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த படம் வர்மா. இப்படத்தை சேது இயக்குனர் பாலா இயக்கினார். தெலுங்கில் விஜய தேவரகொண்டா நடித்த அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆக இது உருவானது. ஆனால் பாலா இயக்கிய வர்மா திருப்திகரமாக இல்லை என அப்படம் நிறுத்தி வைக்கப்பட்டு முற்றிலுமாக ஆதித்யா வர்மா என்ற பெயரில் கிரைசியா இயக்கத்தில் புதிதாக உருவக்கப் பட்டது. இந்தபடம்தான் திரைக்கு வந்தது.


பாலா இயக்கத்தில் உருவான வர்மா ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அவ்வப்போது தகவல் வருகிறது. ஆனால் இதனை தயாரிப்பு தரப்பு மறுத்துள்ளது.
சேது படம் மூலம் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்ததால் தனது மலன் துருவை பாலா இயக்கத்திலேயே ஹீரோவாக அறிமுகப்படுத்த எண்ணினார் விக்ரம். ஆனால் வெண்ணை திரண்டபோது பானை உடைந்த கதையாக பாலா இயக்கிய வர்மா ரிலீஸ் அகும் நேரத்தில் நிறுத்தப்பட்டது. அதற்கு காரணம் பட தயாரிப்பு நிறுவனத்துக்கும் பாலா வுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான்.
வர்மா இப்போது ஒடிடியில் ரிலீஸ் ஆகாமல் இருந்தாலும் எதிர்காலத்திலும் இதே நிலைதான் நீடிக்கும் என்று உறுதி யாக யாராலும் கூற முடியவில்லை.

More articles

Latest article