மிழகத்தில் பா.ஜ.க.வின் மாநில தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்ட பின், குற்றப்பின்னணி உள்ளவர்களை கட்சியில் சேர்த்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இந்த நிலையில் சென்னை அருகே வண்டலூரில் நேற்று பா.ஜ.க.வுக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை மாநில தலைவர் முருகன் தலைமையில் நடந்துள்ளது.
அப்போது முருகன் முன்னிலையில் பா.ஜ.க.வில் சேருவதற்காக சூரியா என்ற ரவுடி, தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்துள்ளார்.
சூரியா மீது 6 கொலை வழக்குகள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இது பற்றி தகவல் அறிந்த போலீசார், ரவுடி சூரியாவை சுற்றி வளைத்து கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினார்.
ஆனால் போலீசார் தன்னை கைது செய்ய முயற்சிப்பதை அறிந்த சூரியா , அங்கிருந்து காரில் தப்பி ஓடி விட்டார்.
எனினும் சூரியாவின் கூட்டாளிகள் 6 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
அவர்கள் வைத்திருந்த கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
-பா.பாரதி.