சென்னை: தமிழகத்தில் இன்று முதல் பொது பேருந்து போக்குவரத்து தொடங்கிய நிலையில், கடந்த  மார்ச் மாதம் எடுக்கப்பட்ட மாதாந்திர பஸ் பஸ் பாஸை இந்த மாதம் 15ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சென்னை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக பொதுப்போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தன. தற்போது ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக, பொதுப் போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பயணிகள் தினசரி பாஸ், வாராந்திர  மற்றும் மாதாந்திர பாஸ்கள் பெற்றுக் கொள்ளலாம் என போக்குவரத்துத் துறைஅறிவித்திருந்தன.

இன்றுமுதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மீண்டும் பொது போக்குவரத்தை அரசு துவக்கி யுள்ளது. இதனால் மக்கள் ஆர்வமுடன் பேருந்துகளில் பயணிக்க தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, கடந்த மார்ச் மாதம் பேருந்து பாஸ் எடுத்தவர்கள், கடைசி ஒருவாரம் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அவர்கள் அந்த பாஸ்களை மேலும் 15 நாட்கள் உபயோகப்படுத்தலாம் என போக்குவரத்துதுறை அனுமதி வழங்கி உள்ளது.

கடந்த மார்ச் மாதம் எடுத்த ஆயிரம் ரூபாய் பாஸை செப்டம்பர் 15 வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.