மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’.

இந்தப் படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தக் கூட்டணியில் சின்ன பழுவேட்டரையராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நிழல்கள் ரவி.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனாஅச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராயை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்ளும் பெரிய பழுவேட்டரையர் எனும் கதாபாத்திரத்தில் பிரபு நடிக்க உள்ளார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் நடிப்பதாக சொல்லப்படுகிற்து.

இதனால் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பது பாலாஜி சக்திவேல் என்பது உறுதியாகியுள்ளது. இந்த கதாபாத்திரத்துக்காக பாலாஜி சக்திவேல் நீண்ட தாடி வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.