விஸ்வாசம் படத்தில் கண்ணான கண்ணே பாடல் பாடியவர் பாடகர் சித்ஸ்ரீராம். இப்பாடல் இவரை பிரபலமாக்கியது போல் கமலின் பிக்பாஸ் ஷோ மூலம் பிரபலமானவர் நடிகர் தர்ஷன். இவர், பின்னர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர் நேஷனல் தயாரிக்கும் படத்தில் ஒப்பந்தம் ஆனதாக தகவல் வந்தது. ஆனால் அது உறுதியாகவில்லை.
நடிகர் தர்ஷன் ஒரு இசை ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளார். ‘தாய்க்கு பின் தாரம்’ என பெயரிடப்பட்டுள்ள இதில் ஆயிஷா தர்ஷனுடன் நடித்துள்ளார். ஆயிஷா டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். ஆல்பத்தில் நடித்ததுபற்றி கூறிய தர்ஷன் தனது கனவு நனவாகி இருப்பதாக கூறினார்.
தர்ஷன், ஆயிஷா இசை ஆல்ப பாடல் களை சித்ஸ்ரீராம் பாடி இருக்கிறார். தரண் குமார் இசை அமைத்திருக்கிறார். இசை ஆல்பம் நாளை வெளியாக உள்ளது.
Patrikai.com official YouTube Channel