Skip to content
  • Fri. Sep 18th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

ஸ்டெர்லைட் தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு, மக்கள் அதிகாரம் அமைப்பு கேவியட் மனு தாக்கல்

Aug 19, 2020

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலையை நிரந்தரமாக மூ​ட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்ட நிலையில், தீர்ப்பை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றம் மனுதாக்கல் செய்யலாம் என்பதால், தமிழக அரசு, மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் கேவியட் மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்த சூழலில் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த மக்கள் போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய  துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு பிறப்பித்தது.

இதைத்தொடர்ந்து,  ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில்நேற்று (ஆகஸ்டு 18) சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதன்படி,  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று கூறி உள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தூத்துக்கு மாவட்ட மக்களிடையே பெரும் வரவற்பை பெற்றுள்ளது. மேலும்,  அரசியல் கட்சி தலைவர்களும் மகிழ்ச்சி  தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து,  ஸ்டெர்லைட் ஆலை ​நிர்வாகமான வேதாந்தா நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், உச்சநீதி மன்றத்தல் இன்று தமிழகஅரசு சார்பிலும, , மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பிலும்   கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில்,  ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Post navigation

அவதூறு வழக்கை தள்ளுபடி செய்யக்கோரிய செய்தியாளர் மேத்யூ சாமுவேலின் மனு தள்ளுபடி!
விநாயகர் சதுர்த்தி அன்று கலவரம் நடத்த திட்டமா? வைரலாகும் எச்.ராஜாவின் வன்முறை பதிவு…

Related Post

தமிழ் நாடு

₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

தமிழ் நாடு நெட்டிசன்

மில்லினியல்ஸ், Gen Z-யைத் தொடர்ந்து Gen X-யையும் தொற்றிக் கொண்ட 80’s ஸ்டைல் AI புகைப்படங்கள்… உங்களுக்கான Promptகள் இதோ!

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer