Skip to content
  • Sat. Sep 19th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

கேரள விமான விபத்து- கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு

Aug 8, 2020

கோழிக்கோடு:   நேற்று இரவு கேரளாவில் நடைபெற்ற விமான விபத்து நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது, அந்த  விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விமானம் விபத்துக்கு காரணம் என்ன என்பது விரைவில் தெரிய வரும் வாய்ப்பு உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டத்தின்மூலம் இந்திய அரசு சிறப்பு விமானங்களை இயக்கி இந்தியர்களை அழைத்து வருகிறது. அதன்படி,   துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத் திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது.

இந்த விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 191 பேர் பயணம் செய்தனர். ஆனால், கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக, விமானம் தரையிறங்கு வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், விமானத்தை விமான ஓடுதளத்தில் இறக்கியபோது, விமானம் து சறுக்கிக்கொண்டு அருகே உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த கோர விபத்தில் விமானி, துணை விமானி உள்பட  18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில்  விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியும், விமானிகளுக்கு  இடையே நடந்த உரையாடலை பதிவு செய்த CVR கருவியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக,விபத்துக்கு காரணம் என்ன என்பது ஆய்வுக்கு பிறகு தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Post navigation

ஆங்கிலேயர் கால கலாசி நடைமுறைக்கு முற்றுப்புள்ளி! இந்தியன் ரயில்வே அறிவிப்பு
கேரள விமான விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை: கொரோனா எதிரொலியாக உறவினர்கள் பார்க்க தடை

Related Post

இந்தியா

டெல்லியில் ஒரு அத்திப்பட்டி… 908 வாக்காளர்கள் மாயம்? சாந்தினி சௌக்கில் பரபரப்பு

இந்தியா

எல்பிஜி சிலிண்டர் விதிகளில் தளர்வு: கிராமப்புற மக்களும் இனி 25 நாட்களுக்கு ஒருமுறை சிலிண்டர் பெறலாம்

இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer