கோழிக்கோடு: கேரள விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை அவர்களது உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாயில் இருந்து 174 பயணிகள், விமானிகள் உள்பட மொத்தம் 191 பேருடன் கேரளாவிற்கு வந்தது. கரிபூரில் உள்ள கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கும் போது எதிர்பாராத விதமாக இரண்டாக உடைந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானிகள் உன்பட 20 பேர் இதுவரை பலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மற்றவர்கள் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந் நிலையில் விபத்தில் சிக்கிய சில பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில் அவர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆகையால், கேரள சுகாதார செயலாளர் விபத்தில் சிக்கி  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க யாருக்கும் அனுமதி இல்லை என்று அறிவித்து உள்ளார்.