9மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு!!

Must read

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 9மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத  9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு அக்டோபர்  6ந்தேதி மற்றும் 9ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு  நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி கடந்த 22 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்று வருகிறது.

இந்த 9 மாவட்டங்களிலும் சேர்த்து : 27,003 பதவிகளுக்கு 97,831 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முதல் நடைபெற்று வருகிறது. ஏராளமான மனுக்கள் குவிந்துள்ளதால், பரிசீலனையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் வேட்புமனுத்தாக்கல் வாபஸ்பெற நாளை கடைசி நாள் என்பதால், அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: 27,003 பதவிகளுக்கு 97,831 பேர் வேட்புமனுத் தாக்கல்….

More articles

Latest article