இங்கிலாந்தில் கண்டறியப்படும் கொரோனா தொற்றில் 99% ஒமிக்ரான் பாதிப்பு

Must read

ண்டன்

ங்கிலாந்தில் கண்டறியப்படும் கொரோனா தொற்றில் 99% ஒமிக்ரான் வகை தொற்று எனத் தெரிய வந்துள்ளது.

தென் ஆப்ரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் உருமாறிய திரிபான ஒமிக்ரான் பாதிப்பு தற்போது பல உலக நாடுகளில் வேகமாகப் பரவி உள்ளது.   இதனால் கொரோனா தொற்று அனைத்து நாடுகளிலும் அதிகரித்துள்ளது.   பல உலகநாடுகளில் கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

ஒமிக்ரானுக்கு முந்தைய திரிபான டெல்டா வைரஸ் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.   ஆனால் டெல்டாவை விட ஒமிக்ரான் பரவல் அதிக வேகமாக உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.   இந்த வேகத்தினால் பல நாடுகளில் ஒமிக்ரான் தொற்று அதிக அளவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இங்கிலாந்து நாட்டில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.   இவ்வாறு பாதிக்கப்பட்டோரில் அதிக அளவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.   சமீபத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 2,17,599 பேரில் 2,16,084 பேருக்கு ஒமிக்ரான் மற்றும் 736 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று உள்ளது  தெரியவந்துள்ளது.,

அதாவது இங்கிலாந்தில் தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டோரில் 99% பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  அதைப் போல் 0.33% பேருக்கு டெல்டா வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  தற்போது இங்கிலாந்தில் டெல்டா வகை பரவலை ஒமிக்ரான் வகை வைரஸ் பரவல் மாற்றி உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article