டெல்லி: 40 ஆண்டுகளுக்குப்பின், தமிழ்நாட்டில் 9 புதிய ரயில் வழித்தடம் மற்றும் ரயில்பாதைகள் விரிவுபடுத்த 2023-24 மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் ரூ.1057 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு (2022) தாக்கல் செய்த பட்ஜெட்டிலும், தமிழ்நாட்டில் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ரூ.1000 ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், 46 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன கூறியிருந்தது. அதுபோலவே இந்த ஆண்டும், அதே அளவிலான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
பிப்ரவரி 1ந்தேதி மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், 2023-24 நிதியாண்டில் ₹2.40 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இது 2013-2014 இல் வழங்கப்பட்ட தொகையை விட ஒன்பது மடங்கு அதிகம் என்றும், 2023-23 நிதியாண்டில் ₹1.40 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது இரு மடங்காக ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
இந்த நிலையில், மத்தியஅரசு ரயில்வேக்கு ஒதுக்கிடு செய்துள்ள ரூ. 2.40 லட்சம் கோடியில், ரூ.1057 கோடி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. அதாவது, சுமார் 40 ஆண்டுகளுக்குப்பிறகு 9 புதிய வழித்தடத்துக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 1) செங்கல்பட்டு-மாமல்லபுரம்-புதுச்சேரி-கடலூர், 2) திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை, 3) திண்டிவனம்-ஆரணி-வாலஜா, 4) நகரி, மொரப்பூர்-தர்மபுரி, 5) அட்லபட்டு-புட்டூர், 6) ஈரோடு-பழனி, 7) மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி, 8) ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி, 9) ராமேஷ்வரம்-தனுஷ்கோரி ஆகிய புதிய பாதைகள் அமைக்கப்படஉ ள்ளது.‘ புதிய ரயில்தடத்தில் 18 ரயில்நிலையங்கள் அமைய உள்ளன. 26 பெரிய பாலங்கள், 200 சிறிய பாலங்கள் கட்டப்பட உள்ளன. கடந்தஆண்டு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நிலம்கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
சென்னை-கடலூர் மாமல்லபுரம் புதுச்சேரியா வழியாக 155 கி.மீ பாதைக்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு புதிதாக பாதை அமைக்கப்படுகிறது. “ புதிய ரயில்பாதை செங்கல்பட்டில் தொடங்கி, மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி சென்றடையும். அதற்கான மண்பரிசோதனை உள்ளிட்ட பணிகள் விரைவில் தொடங்கும்.
திண்டிவனம்-நகரி இடையே 180கி.மீ பணிக்காக ரூ200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாலை இடையிலான 70கி.மீ பாதைக்கு ரூ.100 கோடியும் ,
மொரப்பூர்-தர்மபுரி இடையிலான 36கிமீ தடத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தஇரு தடங்களுக்கு இடங்களுக்கு இடையே 8 ரயில்நிலையங்கள் அமைக்கப்படஉள்ளன
தாம்பரம்-திருவண்ணாமலை இடையே ரயில் இணைப்பு வரும் பட்சத்தில் 163 கி.மீ பாதையாக இருக்கும். ஆனால் தற்போது சென்னைவாசிகள் திருவண்ணாமலை செல்ல 225 கி.மீ காட்பாடி, வேலூர் வழியாக சுற்றிச் செல்லவேண்டியுள்ளது.
மொரப்பூர்-தர்மபுரி புதிய தடம் சென்னையை இணைக்கும் வகையிலும் பெங்களூரு-ஹோசூர் பாதைக்கு மாற்றாகவும் இருக்கும்.
சரக்குப் போக்குவரத்துக்காக எண்ணூர் துறைமுகம் அட்டிபட்டு-புத்தூர்இடையிலான 88கி.மீ, ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி(இருங்காட்டுக்கோட்டை-ஆவடி) 60கி.மீ பாதைகள் முறையே ரூ.50 கோடி, ரூ.57.90 கோடியில் அமைக்கப்படஉள்ளன
மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி பாதைக்காக ரூ.114 கோடியும், ஈரோடு-பழனி இடையே புதிய பாதைக்கு ரூ.50 கோடியும், ராமேஷ்வரம்-தனுஷ்கோடி இடையிலான புதிய வழித்தடத்துக்கு ரூ.385.90 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது,