டெல்லி:

இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தமிழகத்தில் 88 ஆயிரத்து 478 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் நீட் தேர்வு தகுதி அடிப்படையிலேயே இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படவுள்ளது. தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனினும் இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை. அதனால் இந்த ஆண்டு தமிழகத்திலும் நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் மேலும் 3 நீட தேர்வு மையங்களை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இன்று அறிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்தாண்டு நீட் தேர்வு எழுத தமிழகத்தில் இருந்து 39 ஆயிரத்து 951 பேர் விண்ணப்பித்தனர்.

இதில் தேர்வு எழுதியவர்களின் 13 ஆயிரத்து 916 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 100 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. மொத்தம் 88 ஆயிரத்து 478 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.