சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை வேட்பாளர் தீபா மனு ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

சசிகலாவுக்கு எதிராக களமிறங்கிய ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா,  ஜெயலலிதா பிறந்தநாளான 24ஆம் தேதி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கி கொடியையும் அறிமுகம் செய்தார்.

அதைத்தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதில் போட்டியிட மனு தாக்கல் செய்தார். அவரது மனு குறித்த அறிவிப்பு வெளியிட தேர்தல் ஆணையர் காலதாமதம் செய்ததால், அவரது மனு நிராகரிக்கப்படுமோ? என கேள்வி எழுந்தது.

இந்நிலையில் அவரது மனு ஏற்கப்பட்டதாக தேர்தல் ஆணையர் அறிவித்து உள்ளார்.

அதே வேளையில், சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளராக மனு தாக்கல் செய்த சேவியரின் மனு தள்ளுபடி செய்து தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

ன்மொழிவு படிவத்தில் உரிய கையெழுத்து இல்லாத காரணத்தினால் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் மனு நிகாகரிக்கப்பட்டது.