டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களில் 88 சதவிகிதத்தினர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: நாட்டில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களில் 88 சதவிகிதத்தினர் 45 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஆவர். அதனால்தான் ஏப்ரல் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்றார்.

தேசிய நோய் தடுப்பு மையத்தின் எஸ்.கே. சிங் கூறி இருப்பதாவது: புதிய வகை கரோனா தொற்று பரவி வருகிறது. மொத்தம் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 771 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றார்.