சென்னை: முன்னாள்மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான மறைந்த வாழப்பாடியாரின் 86வது பிறந்தநாளை முன்னிட்டு, ராஜீவ் பவனில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருடன் வாழப்பாடியாரின் மகனும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்ததலைவருமான இராம.சுகந்தன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான திரு.வாழப்பாடி கே.ராமமூர்த்தியின் 86வது பிறந்தநாள் இன்று கொண்டாடப் படுகிறது. இதையொட்டி, ராஜா அண்ணாமலைபுரம், ராஜிவ் பவனில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணித்து மரியாதை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான வாழப்பாடி திரு. கூ. இராமமூர்த்தி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (18.1.2025) ராஜா அண்ணாமலைபுரம், ராஜிவ் பவனில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை மாலையிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
வாழப்பாடியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சொந்த ஊரான வாழப்பாடி பேருந்து நிலையம் முன்பு தலைவர் வாழப்படியார் திருவுருவப் படத்திற்கு அப்பகுதி காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து அங்கு அமைந்துள்ள வாழப்பாடியார் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.