சென்னை: இரண்டு பேர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் காரணமாக ஏற்பட்ட நெமிலி நெல்வாய் வன்முறைக்கும் விசிகவுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை என விசிக கட்சி தலைவர் திருமாவளன் தெரிவித்து உள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகேயுள்ள நெல்வாய் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டவர்கள் பாமகவினர் என்று கூறப்படுகிறது. இதற்கு பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்த நிலையில், விசிக தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சோ்ந்தவா் சூா்யா (எ) தமிழரசன் (23). இவரது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்தவா் விஜயகணபதி (22). இவா்கள் இருவருக்கும் திருமால்பூரைச் சோ்ந்த பிரேம் (24) என்பவருக்குமிடையே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று திருமால்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரேம் என்பவர், திருமால்பூரில் இருந்து நெமிலிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, பனப்பாக்கத்தில் இருந்து திருமால்பூர் செல்லும் சாலையில், நெல்வாய் அருகில் நின்று கொண்டிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த சூர்யா என்கிற தமிழரசன் (வயது 22), விஜயகணபதி (வயது 25) ஆகிய இருவரும் சேர்ந்து பிரேம்குமார் (வயது 25) மற்றும் அவரது நண்பர்களிடம் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் செல்லக்கூடாது என எச்சரிக்கை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுத் தானாக கலைந்து சென்றுள்ளனர்.
இதையடுத்து அடுத்த நாளான ஜனவரி 16ந்தேதி அன்று நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா, விஜயகணபதி மற்றும் சிலர் திருமால்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிவிட்டு நடந்து வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த திருமால்பூரைச் சேர்ந்த பிரேம்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சூர்யா மற்றும் விஜயகணபதி இருவரையும் வழிமறித்து தகராற்றில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், ஆத்திரமடைந்த அவர்கள் கேனில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை இருவர் மீதும் ஊற்றியதாகவும், அதையடுத்து பிரேன் என்பவர் தீ வைத்துக் கொளுத்தி விட்டு, தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. அப்போது, இருவரும் வலி தாங்க முடியாமல் அலறித் துடித்துள்ளனர். அலறல் சத்தம் கேட்டம் அப்பகுதியில் விரைந்து வந்து, பற்றி எரிந்த தீயை அணைத்துள்ளனர். ஆனால், அதற்கு இளைஞர்கள் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இதைக்கண்ட அக்கம்பக்கத்தில் அவர்கள் மீதான தீயை அணைத்ததுடன், அவர்கள் இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து, காவலுதுறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் அதிக அளவு தீக்காயம் அடைந்த இருவரும், மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருவரும் சோ்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.
இதற்கிடையில், இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்திய நபர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, காயமடைந்தவர்களின் உறவினர்கள் திருமால்பூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பதற்றத்தைத் தவிர்க்க ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று, விசாரணை நடத்தினர்.
இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட அறிக்கையில், பிஎன்எஸ் (Bharatiya Nyaya Sanhita) – U/S 296(b), 115(2), 109, 351(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள நெமிலி போலீசார், குற்றம் சாட்டப்பட்ட பிரேம்குமார் கைது செய்துள்ளனர். மேலும், இருவரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் பேச்சு நடத்தினா். அந்த பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையில் இருவரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தொடர்பாக, பரத் என்பவரை நெமிலி காவல் துறையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், தலைமறைவாக உள்ள மற்றவா்களை விரைவில் கைது செய்யப்படுவாா்கள், அவா்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனா்.
இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகேயுள்ள நெல்வாய் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருப்பதாவது: ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகேயுள்ள நெல்வாய் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை. பாமக நிறுவனரும், அதன் தலைவரும் இதனை வைத்து வட மாவட்டங்களில் சமூகப் பதற்றத்தை உருவாக்கிட முயற்சிப்பது அதிர்ச்சியளிக்கிறது. விசிகவுக்கு எதிராக பாமக பரப்பும் வதந்தியை நம்ப வேண்டாமென பொது மக்களைக் கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளார்.
முன்னதாக பாமகவினர் மீது பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்ட சம்பவத்துவ்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், குற்றவாளிகளை காக்க காவல்துறை முயல்வது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” பாட்டாளி மக்கள் கட்சியினர் மீதான இந்தக் கொடியத் தாக்குதலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் சாதிவெறியும், கட்டுப்படுத்தப்படாத கஞ்சாப் புழக்கமும் தான் காரணம் ஆகும். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாதி அடிப்படையில் வன்முறையில் ஈடுபடுவதும், தாக்குதல் நடத்துவதும் இது முதல் முறையல்ல. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நெல்வாய் கிராமத்திற்குள் புகுந்த அவர்கள், அங்கிருந்த மக்களின் சொத்துகளை சூறையாடினர்.
அதைக் கண்டித்து பா.ம.க. சார்பில் கடுமையான போராட்டம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் வந்தது. சில ஆண்டுகள் கட்டுக்குள் இருந்த அவர்களின் அட்டகாசம் இப்போது மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. திருமால்பூர் பகுதி உள்பட இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் இத்தகைய வன்முறைகள் அடிக்கடி நடப்பதற்கு அங்கு கட்டுப்பாடில்லாமல் நடைபெறும் கஞ்சா வணிகமும் முக்கியக் காரணம் ஆகும்.
கஞ்சா வணிகத்தைக் கட்டுப்படுத்தும்படி பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தியும், போராட்டம் நடத்தியும் வருகிறது. ஆனால், கஞ்சா வணிகம் இன்று வரை கட்டுப்படுத்தப்படாமல் தொடருகிறது. பா.ம.க.வினர் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்கிய 6 பேரையும் கைது செய்து சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டிய காவல்துறை, அவர்களில் பிரேம் உள்ளிட்ட இருவரை மட்டுமே கைது செய்துள்ளது. மீதமுள்ள குற்றவாளிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.
பாமகவினர் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 6 பேரையும் காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும். தமிழ்நாடு முழுவதும் கஞ்சா வணிகத்தை ஒழிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இத்தகைய தாக்குதல்கள் நடக்காத வகையில் சாதிவெறி சக்திகளைக் கட்டுப்படுத்துவதற்கும் தமிழக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் காட்டத்துடன் ராமதாஸ் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.