கொரோனா தொற்று மலையாள சினிமாவை ரொம்பவும் பதம் பார்த்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.

ஷுட்டிங் முடிந்து சுமார் நூறு படங்கள் ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் ஊரடங்கு போடப்பட்டதால், மலையாள திரை உலகம் ஸ்தம்பித்து போனது.

ஒரு வழியாக தியேட்டர்கள் திறக்கப்பட்டு, இப்போது நூறு சதவீத இருக்கைகளுடன் திரையரங்குள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளதால், கேரள தயாரிப்பாளர்கள் சந்தோஷத்தில் மூழ்கி உள்ளனர்.

இந்த ஆண்டில் 80 திரைப்படங்களை வெளியிட தேதி குறித்து விட்டனர்.

பெரிய படங்கள் வரிசையில் மம்முட்டி நடித்துள்ள ‘THE PRIEST’ திரைப்படம் அடுத்த மாதம் நான்காம் தேதி வெளியாகிறது.

அறிமுக இயக்குநர் ஜோவின் சாக்கோ டைரக்டு செய்துள்ள இந்த படத்தில் மம்முட்டி ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார்.

மோகன்லால் நடித்துள்ள மற்றொரு பெரிய பட்ஜெட் படமான ‘மரக்காயர் – அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ அடுத்த மாதம் 26 ஆம் தேதி ரிலீஸ்.

கடந்த ஆண்டு மார்ச் மாதமே இந்தப்படம் வெளிவந்திருக்க வேண்டும்.

கொரோனாவால் ஒரு வருடம் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த, ‘சிங்கம்’ தாமதமாக வருகிறது.

– பா. பாரதி