டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பில் 8 மாநிலங்களில் மட்டுமே 69 சதவிகிதம் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.

நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் பற்றி மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது: நாட்டில் சனிக்கிழமை நிலவரப்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 4,54,940 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பில் 4.87 சதவீதம் ஆகும்.

புதியதாக பதிவாகியுள்ள கொரோனா தொற்றில் 69.04 சதவிகிதம் 8 மாநிலங்களில் மட்டுமே பதிவாகி இருக்கிறது. மகாராஷ்டிரா, அரியானா, டெல்லி, கேரளா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அதிக பாதிப்புகள் பதிவாகி இருக்கின்றன என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.