டில்லி:

17வது மக்களவைக்கான கடைசி கட்ட தேர்தலான 7வது கட்ட தேர்தல் இன்று மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உள்படநாடு முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள, 59 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது ஜனநாயக கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் உள்ள 246வது எண் பூத்தில்தனது வாக்கினை செலுத்தினார். முன்னதாக அங்குள்ள கோரக்நாத் கோவிலுக்கு சென்று விசேஷ பூஜை நடத்தினார்.

உ.பி. முதல்வர் யோகி வாக்குப்பதிவு

அதுபோல  பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாட்னாவில் உள்ள ராஜ்பவனிலும் தங்களது வாக்கை பதிவு செய்தார். துணைமுதல்வர்  சுஷில் மோடி பாட்னாவில்உள்ள பூத் எண் 49ல் தனது வாக்கினை பதிவு செய்தார்.

பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங், தனது வாக்கினை பஞ்சாப் மாநிலத்தில் தனது சொந்த ஊரான ஜலந்தர் கார்கி கிராமத்தில் செலுத்தினார்.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பாட்னா  பெண்கள் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த பூத் எண் 77ல் தனது வாக்கினை பதிவு செய்தார். மேலும் முன்னணி அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

பீகார் முதல்வர் நிதிஷ் வாக்குப்பதிவு

17-வது மக்களவை தேர்தல், இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. மக்களவைவில் உள்ள, 543 தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என, மார்ச், 10ல்  தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் அரோரா அறிவித்தார். அதையடுத்து ப்., 11 முதல் இதுவரை, 6 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இன்று கடைசி கட்டமாக 7வது கட்மா 8 மாநிலங்களை சேர்ந்த 59 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது..

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடும் உத்தர பிரதேசத்தின், வாரணாசி தொகுதியில்,  கடந்த மக்களவை தேர்தலில், 3.71 லட்சம் வித்தியாசத்தில் மோடி வென்றார். அவருக்கு, 5.51 லட்சம் ஓட்டுகள் கிடைத்தன.

பீகார் துணைமுதல்வர் சுஷில்மோடி வாக்குப்பதிவு

தற்போ அங்கு பிரதமர் மோடியை எதிர்த்து, காங்., சார்பில், அஜய் ராய் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் – சமாஜ்வாதி கூட்டணியில், சமாஜ்வாதியின் சார்பில், ஷாலினி யாதவ் நிறுத்தப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சர், மனோஜ் சின்ஹா, உத்தர பிரதேச பாஜக தலைவர், மகேந்திர நாத் பாண்டே ஆகியோரும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

மத்திய பிரதேசத்தில், மத்திய அமைச்சர்கள், காந்திலால் புரியா, அருண் யாதவ் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாரத்

பீஹாரில் மத்திய சட்ட அமைச்சர், ரவி சங்கர் பிரசாத் உள்பட 4 மத்திய அமைச்சர்கள் போட்டியிடுகின்றனர். பீகாரின் பாட்னா சாஹிப் தொகுதி, மிகவும் எதிர்பார்க்கப்படும் தொகுதியாக அமைந்துள்ளது.  அங்கு தற்போதைய, எம்பியான நடிகர் சத்ருகன் சின்ஹா, பாஜகவில் இருந்து விலகி, தற்போது, காங்கிரஸ் சார்பில் இங்கு போட்டியிடுகிறார்.

ஹர்பஜன்சிங்