தனது ரசிகர்கள் பற்றி நடிகை ஓவியா ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டவர் நடிகை ஓவியா. சமூகவலைதளங்களில் அவர் தனது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

பிக்பாஸ் ஒளிபரப்பான நேரத்தல், ஓவியா ஆர்மி என்று ஹேஷ்டேக் வைத்து அவரை காப்பாற்றும் அளவுக்கு களத்தில் இறங்கி செல்பட்டனர் அவரது ரசிகர்கள். இந்நிலையில் இப்போது ஓவியா ;காதல் பற்றி ஒரு ட்விட் பதிவிட்டிருக்கிறார்.

அதில், “ நான் வெற்றிகரமாக இருப்பதால் என் ரசிகர்கள் என்னை நேசிக்கவில்லை. என் ரசிகர்கள் என்னை நேசிப்பதால்தான், நான் வெற்றிகரமாக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அந்த ட்விட் பதியப்பட்ட சிறிது நேரத்திற்குள் அதனை ஆயிரக்கணக்கில் பகிர்ந்துவருகின்றார்கள் ரசிகர்கள்.

ஒவியா எதைச் சொன்னாலும் ஹிட்தான்!