நைஜர்: நைஜிரியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள நைஜர் ஆற்றில் வெள்ளப்பபெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆற்றில் பயணிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்துக்குள்ளாக்கி, அதில் பயணம் செய்தவர்களில் 76 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

நைஜீரியாவில் பெரும்பாலான ஊர்களுக்கு செல்ல படகு பயணமே நடைபெற்று வருகிறது. அங்கு தற்போத பருவமழை  கடந்த செப்டம்பர் மாதம் முதலே பெய்து வருpகறது. தீவிரமடைந்துள்ளது பருவமழை தீவிரமடைந்து தொடர் மழைபொழிந்து வருகிறது. இதனால் , அங்குள்ள ஆற்றில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.  ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. ஏற்கனவே கடந்த செப்டம்பர் 19ந்தேதி மழை பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 160 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2,25,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்சென்று தங்க வைத்துள்ளதாகவும் அந்நாட்டு தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், நேற்று (அக்டோபர் 9ந்தேதி) அங்குள்ள நைஜர் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள  அனம்ப்ரா மாநிலத்தில்  ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த படகில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றதாலே கவிழ்ந்ததாக அப்பகுதி மக்கள் குற்ற்ம சாட்டி உள்ளனர்.

இந்த படகு திடீர் வெள்ளத்தில் சிக்கி தலைகீழா கவிழ்ந்தது. இதில், படகில் பயணம் செய்த சுமார் 85 பேரில் 76 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.  இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டு அதிபர் முகமது புகாரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நைஜிரியாவில் நடப்பாண்டு பெய்து வரும் பருவமழை காரணமாக, சுமார் 20 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். பெரும்பாலான விளைநிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் அழுகிவிட்டதால் இந்த ஆண்டு உணவு தட்டுப்பாடு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.