டெல்லி: 75-வது சுதந்திர தினம் – ஹர் கர் திரங்கா  பிரச்சாரத்தில் பரவலாக பங்கேற்குமாறு பல்கலைக்கழகங்களை யுஜிசி அறிவுறுத்தி உள்ளது.

நாடு முழுவதும்  75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஹர் கர் திரங்கா என்ற பெயரில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கல்விக் கூடங்களில் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளதுடன், பொதுமக்கள் 3 நாள் தேசிய கொடியை தங்களது வீடுகளில் ஏற்றி பெருமை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  இந்த நிலையில், 75-வது சுதந்திர தினவிழா முன்னிட்டு, ஹர் கர் திரங்கா  பிரச்சாரத்தில் பங்கேற்குமாறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC புதிய  உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி,75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக #harghartiranga ஹேஷ்டேகில் பதிவுகள் இட வேண்டும் மாணவர்கள், பேராசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கிட நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு  UGC உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் கீழ் ஹர் கர் திரங்கா பிரச்சாரம் கொண்டாடப்படுகிறது. மத்திய அரசு தொடங்கியுள்ள ‘ஹர் கர் திரங்கா பிரச்சாரம்’ நாடு முழுவதும் பரவலாக பிரபலமடைந்துள்ளது. இதுதொடர்பாக யுஜிசி வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களை  75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் கீழ் ஹர் கர் திரங்கா பிரச்சாரம் கொண்டாடப்படுகிறது. அதில் பங்கேற்குமாறு அறிவுறுத்தி உள்ளது.

தேசியக் கொடியானது கையால் நூற்பு மற்றும் கையால் நெய்யப்பட்ட அல்லது இயந்திரத்தால் செய்யப்பட்ட, பருத்தி / பாலியஸ்டர் / கம்பளி / பட்டு காதி பந்தல் ஆகியவற்றால் செய்யப்பட வேண்டும் என்று யுஜிசி கூறியது, மேலும் அனைத்து பல்கலைக்கழகங்களும் இந்த அறிவுறுத்தல்களைப் பரப்பவும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற உறுப்பினர்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறது என தெரிவித்துள்ளது.

முன்னதாக  செய்தியாளர்களிடம் பேசிய  UGC தலைவர் எம்.ஜெகதேஷ் குமார், உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்கள், உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், தேசியக் கொடியுடன் செல்ஃபி எடுத்து தங்களது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யவும், அதிகாரப்பூர்வ இணையதளமான — hargartiranga.com இல் படங்களை பதிவேற்றம் செய்யவும் கேட்டுக் கொண்டார். இதுதொடர்பான வீடியோ யுஜிசி தலைவர் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

UGC யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில்,  “முற்போக்கான சுதந்திர இந்தியாவின் 75 புகழ்பெற்ற ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் (AKAM) கொண்டாடப்படுகிறது. AKAM-ன் கீழ், ‘ஹர் கர் திரியங்கா’ என்ற பிரச்சாரம் நடத்தப்பட்டது. குடிமக்கள் தங்கள் வீடுகளில் இந்திய தேசியக் கொடியை ஏற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்டது. இந்திய தேசியக் கொடியை காட்சிப்படுத்துவது/ ஏற்றுவது/பயன்படுத்துவது இந்தியக் கொடி குறியீடு, 2oo2 மற்றும் தேசிய மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம், 1971 ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.