சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 74,416 பேர் வேட்புமனு தாக்கல்! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது.  அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, வேட்புமனு தாக்கல்  ஜனவரி 28ந்தேதி தொடங்கி பிப்ரவரி 4ந்தேதியுடன்  முடிவடைந்தது.  இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 12,838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 74,416 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ள மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

அதன்படி,  மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 14,701 பேரும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 23,354 பேரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 36,361 பேர் என மொத்தம் 74,416 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.