சென்னை

முதல் முறையாக தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆன்லைன் மூலம் 75 ஆசிரியர்களை நியமனம் செய்துள்ளது.

தமிழகத்தில் முதன்முறையாக ஆசிரியர் தேர்வுக்காகப் பள்ளிக் கல்வித் துறை ஆன்லைன் மூலம் சிறப்புக் கலந்தாய்வு ஒன்றை நிகழ்த்தியது.   இதற்காக அந்தந்த மாவட்ட கல்வித்துறை அலுவலரிடம் பதிவு செய்துக் கொள்ளவேண்டும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.   அவ்வாறு பதிவு செய்தவர்கள் இந்த கலந்தாய்வில் பங்கு பெற்றனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த ஆன்லைன் கலந்தாய்வு மூலம் அரசுப் பள்ளிகளுக்காக 75 ஆசிரியர்களைத் தேர்வு செய்துள்ளது.  அதில் 74 பேர் இசை ஆசிரியர்கள் ஆவார்கள்.  இந்த தகவலை தெரிவித்த பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் இவ்வாறு ஆன்லைன் கலந்தாய்வில் ஆசிரியர்கள் தேர்வு நடப்பது இதுவே முதல் முறை எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது நடக்கும் இந்த முறை எளிதாகவும் வெளிப்படையாகவும் உள்ளதால் இதே முறை  இனி பின்பற்றப் பட போவதாகவும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்துக் கொண்டால் இனி நடக்க உள்ள கலந்தாய்வில் கலந்துக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.