சென்னை: ரமலான் மாத நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு ரூ.26.81 கோடி மதிப்பிலான 7,040 மெட்ரிக் டன் பச்சரி! மு.க.ஸ்டாலின் உத்தரவு

கடந்த ஆண்டு (2023) நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 6,500 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ரூ.26.81 கோடி மதிப்பிலான 7,040 மெட்ரிக் டன் பச்சரி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் ரம்சான் நோன்பு இம்மாதம் இறுதியில் தொடங்குகிறது. தொடர்ந்து 30 நாள்கள் கடைப்பிடிக்கப்படும் நோன்புக் காலங்களில், பள்ளிவாசல்களில் பச்சரிசியில் தயாரிக்கும் நோன்புக் கஞ்சி வழங்கப்படுவதுண்டு. நோன்புக் கஞ்சி வைப்பதற்காக ஆண்டுதோறும் பள்ளிவாசல்களுக்கு கட்டுப்பாடு விலையில் அரசு பச்சரிசி வழங்கி வருகிறது.

இந்தஆண்டும் 2024–ஆம் ஆண்டு, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க மாண்புமிகு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிவாசல்களுக்கு ரூ.26.81 கோடி மதிப்பிலான 7,040 மெட்ரிக் டன் பச்சரி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.