இலங்கை மீனவர்கள் 7 பேர் சிறையிலிருந்து விடுதலை! தமிழக அரசு

Must read

சென்னை,

ந்திய கடல்பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது  செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 7 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

தூத்துக்குடியிலிருந்து 150 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 7 பேரை  இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.

அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இலங்கையை சேர்ந்த மீனவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. அதையடுத்து  அவர்கள் புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு, தூத்துக்குடி கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்கள் நாளை இலங்கை சென்றடைவார்கள் என தெரிகிறது.

அடுத்த மாதம் மோடி இலங்கை செல்ல இருப்பதை தொடர்ந்து, தமிழக அரசு  இந்த விடுதலை முடிவை எடுத்திருக்கலாம் என தெரிகிறது.

More articles

Latest article