தமிழகத்தில் 7 கொரோனா நோயாளிகள் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணம்… விஜயபாஸ்கர்

Must read

சென்னை:
மிழகத்தில் 7 கொரோனா நோயாளிகள் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணமடைந்து இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் இன்று புதியதாக  827 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது.  அதேவேளையில் இன்று  639 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டு டிஸ்சார் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணடைந்தோர் எண்ணிக்கை 10,548 ஆக உயர்ந்துள்ளது. இது 55% சதவிகிதம் என்று கூறினார்.
மேலும்,  சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை உள்பட சில மருத்துவமனைகளில், சில கொரோனா நோயாளி களுக்கு பிளாஸ்மா சிகிச்சை மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.  அவர்களில் 7 பேர் குணமடைந்து உள்ளனர். இது வரவேற்கக்கூடியது.
இன்று பாதிக்கப்பட்ட 827 பேரில் 117 பேர் வெளிமாநிலத்தில் இருந்துவந்தவர்கள் என்று கூறிய  அமைச்சர், பாதிப்பு எண்ணிக்கையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.
இது ஒரு நோய் உலகம், தற்போது  முழுவதும் பரவி உள்ளது. தமிழகத்தில், அதிகப்படியான பரிசோதனைகள் செய்வதால் தான் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதுவரை தமிழகத்தில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 1,253 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 936 பேர் மகாராஷ்டிராவில்  இருந்து வந்தவர்கள், மேலும், பிரான்ஸ் 15%, இத்தாலி 14%, இங்கிலாந்து 14% போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.7% என மிகக் குறைவானதாகவே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article