சென்னை:
மிழகத்தில் இன்று 827 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது.
இன்று  பதிவான 827 பேரில்,  559 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இதனால் சென்னையில் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக உயர்ந்துள்ளது.  இன்று கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் பலி எண்ணிக்கை 145 ஆகவும்,   இன்று 639 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில்,  10,548 பேர் குணமடைந்து  இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்து உள்ளர்.
இன்று நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட 827 பேரில் 117 பேர் வெளிமாநிலத்தில் இருந்துவந்தவர்கள் என்றும்,  அதிகப்படியான பரிசோதனைகள் செய்வதால் தான் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதுவரை தமிழகத்தில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 1,253 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 936 பேர்  மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.   பிரான்ஸ் 15%, இத்தாலி 14%, இங்கிலாந்து 14% போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.7% என மிகக் குறைவானதாகவே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்று மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:
சென்னை 559, செங்கல்பட்டு 45, கடலூர் 2, காஞ்சிபுரம் 19,  கிருஷ்ணகிரி 1, மதுரை 8, நாகப்பட்டினம் 2,  ராணிப்பேட்டை 1, சேலம் 7, தஞ்சாவூர் 1,  திருவள்ளூர் 38, திருவண்ணாமலை 16, தூத்துக்குடி 3,  திருநெல்வேலி 1, வேலூர் 2, விழுப்புரம் 3, விருதுநகர் 2,  மொத்தம் 710, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் 117 ஆக மொத்தம் 827 பேர்.