சென்னை:

மிழகத்தில் இன்று மேலும்  827 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில்   559 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இதனால், சென்னையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை 12,762 ஆக அதிகரித்துள்ளது.

‘இன்று 12 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 145 ஆக அதிகரித்தது.
இன்று 639 பேர்  கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியதைத் தொடர்ந்து,  குணமடைந்தோர் மொத்த  எண்ணிக்கை 10,548 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குணமடைவோர் விகிதம்  55% ஆக உயர்ந்துள்ளது.
இன்று பாதிப்புக்குள்ளான 827  பேரில், 117 பேர் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள்.
வெளி மாநிலங்களில் இரந்து இதுவரை, திரும்பியவர்களில்  1253 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களில் 936 பேர் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள்.
இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.