பெங்களூரு

தெற்கு கர்நாடக பகுதியில் 7 காங்கிரஸ் வேட்பாளர்கள் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து புகார் அளித்துள்ளனர்.

கடந்த 2013 ஆம் வருட கர்நாடக சட்டசபை தேர்தலில் தெற்கு கர்நாடக பகுதியில் உள்ள எட்டு தொகுதிகளில் ஏழு தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.   நடந்து முடிந்த தேர்தலில் இந்த தொகுதிகளில் மங்களூரு உல்லல் தொகுதியைத் தவிர பாஜக வெற்றி பெற்றுள்ளது.  எனவே இது குறித்து காங்கிரஸுக்கு ஐயம் ஏற்பட்டுள்ளது.

அதை ஒட்டி இந்த தொகுதிகளில் போட்டியிடும் வசந்த பங்காரா (பெல்தங்கடி), ராமநாத ராய் (பனிவால்), மொஹிதின் பாவா (மங்களூரு வடக்கு), லோபோ (மங்களூரு தெற்கு), அபாயசதந்திரா (மோதபித்ரி) சகுந்தலா ஷெட்டி, (புத்தூர்), மற்றும் ரகு (சுல்லியா) ஆகியோர் இந்த தொகுதிகளில் பயன்படுத்தப் பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து  புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து கர்நாடக காங்கிரஸ் காரியதரிசி நாரயண், “வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு உள்ளதாக தெரிகிறது.    அப்படி இல்லை எனில் ராம்நாத் ராய் போன்ற மூத்த தலைவர்கள் பின் தங்க வாய்ப்பே இல்லை.   வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு உள்ளதாக ஏற்கனவே பாஜக உட்பட பல கட்சியினர் குறை கூறி உள்ளனர்.    அனைத்து கட்சிகளும் இவ்வாறு குறை கூறும் போது பாஜக ஏன் வாக்குச் சீட்டு மூலம் தேர்த்லை நடத்தக்கூடாது?”  என வினவி உள்ளார்.